2030 ஆம் ஆண்டில் மின் உற்பத்தியை அதிகரிக்க ஜனாதிபதி வழங்கியுள்ள யோசனை

15 Sep, 2020 | 04:25 PM
image

(எம்.மனோசித்ரா)

2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மொத்த மின் தேவையின் 70 வீதத்தை மீள்பிறப்பாக்க சக்தி வள மூலங்களின் மூலம் உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சூரிய சக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Image

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,

எதிர்கால தலைமுறைக்கு பெறுபேறுகளை அனுபவிக்கக்கூடிய பேண்தகு அபிவிருத்திக்கு வழிவகுக்கும் வகையில் முடியுமானளவு மீள்பிறப்பாக்க சக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும். திட்டத்திற்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ள நிறுவனங்கள் சாத்தியவள அறிக்கைகளை தயாரிக்க வேண்டுமென்பதுடன், அனுமதியை விரைவாக வழங்க வேண்டும். ஒரு திட்டத்திற்கு அனுமதி கோரப்படும்போது 14 நாட்களுக்குள் அதற்கு பதில் வழங்கப்படாவிட்டால், அதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக கருதுவதே பொருத்தமானது.

குத்தகை நடைமுறையின் ஊடாக தெரிவு செய்யப்படும் அனைத்து திட்டங்களும் மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படாவிட்டால், வழங்கப்பட்ட அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டும். காற்று அல்லது சூரிய சக்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தனியார் தொழில் முயற்சியாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்கி அரசாங்கம் அனைத்து ஊக்குவிப்புகளையும் செய்ய வேண்டும் என்றார்.

மீள்பிறப்பாக்க சக்திவள அபிவிருத்திக்கு அரசாங்கம் அதிகம் முன்னுரிமையளித்துள்ளது. அதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிடுமாறு ஜனாதிபதி அவரது செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, புனர்நிர்மாணம் செய்யப்பட உள்ள 5,000 நீர்ப்பாசன திட்டங்களை அண்மித்ததாக சூரிய சக்தி தகடுகளை பொருத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து குறிப்பிட்டார். சூரியசக்தி திட்டங்களை குறித்த மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கு மட்டுமே வழங்குவதும் அதன் நன்மையில் குறித்த வீதத்தை விவசாய சமூகங்களுக்கு வழங்குவதும் பொருத்தமானதாகுமென எனவும் குறிப்பிட்டார்.

பாடசாலைகள், தொழிற்சலைகள் மற்றும் அரசாங்க கட்டிடங்களின் கூரைகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கிடைக்கும் நன்மையின் ஒரு பகுதியை குறித்த நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

மன்னார், பூநகரி மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களில் காற்று மின் பிறப்பாக்கிகளை நிர்மாணித்து, தேசிய மின்சக்தி முறைமைக்கு குறிப்பிடத்தக்களவு மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை இணைப்பதுவும் ஒரு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக அனல் மின் மற்றும் பெற்றோலியம் போன்ற எரிபொருட்களை தவிர்த்து உலகின் அனைத்து நாடுகளும் மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை நாடி வருகின்றனர். நாட்டின் மின் தேவையின் வருடாந்த அதிகரிப்பு 6 வீதமாகும். அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதுடன் இணைந்ததாக மின்சக்தி வளத்திற்கான கேள்வி வேகமாக அதிகரிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41