இத்தாலிய முதலீட்டளர்களின் ஆர்வம் குறித்து பிரதமரிடம் விளக்கம்

Published By: Digital Desk 3

15 Sep, 2020 | 03:18 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கு இத்தாலிய முதலீட்டாளர்கள் பலரும் ஆர்வம் கொண்டிருப்பதாக அந்நாட்டு தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறார்.

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் றிரா கிலியானா மனெல்லா நேற்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார். 

இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றக்கூடிய துறைகள் பற்றி விசேடமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக பிரதமர் அலுவலகத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் விவசாயத்துறை மேம்பாடு மற்றும் கிராம அபிவிருத்தி ஆகியவற்றுக்கு இத்தாலி அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு உதவிகளை வழங்கிவருகிறது. அவற்றுக்கு மேலதிகமாக உணவு உற்பத்தி, மீன்வளர்ப்பு, சுற்றுலா ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இதன்போது பேசப்பட்டது.

சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரையில் பெருமளவான இத்தாலிய முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் கொண்டிருக்கலாம் என்று அந்நாட்டுத்தூதுவர் பிரதமரிடம் எடுத்துரைத்தார். எனவே சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய, அதன் மேம்பாட்டிற்கு உதவக்கூடிய விடயங்கள் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான உத்தியோகபூர்வமான இராஜதந்திரத் தொடர்புகள் 1952 ஆம் ஆண்டளவில் ஆரம்பமானதுடன், கடந்த 2016 ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலான் நகரில் கொன்சியூலர் அலுவலகம் திறக்கப்பட்டதுடன் இருநாட்டுத்தொடர்புகள் மேலும் வலுவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18