அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 

அங்கு அதிபர் விளாதிமீர் புதினை நேற்று மாலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சிரியாவில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராணுவம் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், இந்த சந்திப்பின் போது ஐ.எஸ் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவின் உதவியை நாடுவது தொடர்பான தீர்மானம் ஒன்றினை ஜான் கெர்ரி, புதினிடம் அளித்தார். இந்த சந்திப்பின் போது,அதிபர் பராக் ஒபாமா உடனான சந்திப்பை புதின் நினைவு கூர்ந்தார்.

இதனை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லவ்ரோவை ஜான் கெர்ரி இன்று சந்திக்க உள்ளார்.