அமெரிக்காவின் முக்கிய விமானச் சேவையான டெல்டா ஏர், ஜுன் மாத்தில் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததையடுத்து, குளிர்காலத்தில் பிரித்தானியாவிற்கான தனது சேவையை 6 சதவீதமாக குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரித்தன் பவுண்டின் மதிப்பு அதிக அளவில் சரிவைச் சந்தித்துள்ளது மற்றும் பிரித்தன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதால் பொருளாதாரத்தில் ஏற்படும் நிலையற்ற தன்மை ஆகியவற்றால் கூடுதல் வெளிநாட்டு பண அழுத்தத்தை கணித்துள்ளதாக டெல்டா ஏர் தெரிவித்துள்ளது.