இலங்கை தேசிய றகர் குழுவின் 20 வயதிற்கு கீழ்பட்ட குழுவினர் 20 ஆவது ஆசிய இளைஞர் றகர் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாளை 11 ஆம்திகதி சிங்கப்பூர்  பயணமாகவுள்ளனர்.

ஒமல்க குணரத்ன  தலைமையிலான 25பேரை கொண்ட இக்குழுவே இவ்வாறு பயணமாகவுள்ளது.

இவ்வாண்டுக்கான 20 ஆவது ஆசிய இளைஞர் றகர் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இப் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.