Dynamic QR பட்டியல் செலுத்தும் வசதியைப் பெற்றுக்கொடுக்கும் முதலாவது நிறுவனமாக ஸ்ரீலங்கா ரெலிகொம்

14 Sep, 2020 | 01:32 PM
image

இலங்கையின் டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புக்களையும், அறிமுகங்களையும் மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ரெலிகொம் (SLT)  நிறுவனம், பட்டியல் கொடுப்பனவு நடவடிக்கைகளை அடுத்த கட்ட அபிவிருத்தி மட்டத்திற்கு இட்டுச் சென்று, பணப் பரிமாற்றம் அற்ற (SLT)  பட்டியல்களை QR Codes  ஊடாகக் கொடுப்பனவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, ஆரம்பம் முதல் இறுதி வரை, பாதுகாப்பான மற்றும் இலகுவான ஒரு அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கிறது. நாட்டின் தேசிய தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனம் என்ற வகையில், இந்தத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வது அதன் ஒரு குறிக்கோளாகக் காணப்படுகிறது. Dynamic QR Code முறை ஊடாக இறுதிக் கொடுப்பனவுகள் இலகுவாகவும் செயற்திறன் மிக்கதாகவும் இடம்பெறுகிறது.

இதற்கமைய SLT  பட்டியல்கள் அனைத்தும் Lanka QR  சான்றிதழ் பெற்ற Payment app  இனைப் பயன்படுத்தும் எந்தவொரு App ஊடாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். குறித்த வசதிகள் கொண்ட எந்தவொரு வங்கியினதும் App மூலம் SLT பட்டியல்களில் காணப்படும் QR Code  இனை ஸ்கான் செய்வதன் மூலம் குறித்த கொடுப்பனவு எவ்வித தடைகளுமின்றி நேரடியாக இடம்பெறுகிறது.

இந்த வசதிகளுக்கான மத்திய பட்டியல் கொடுப்பனவுகளை ஒன்று சேர்க்கும் வசதியை இலங்கை வங்கி பெற்றுக்கொடுக்கிறது. இரண்டு தொழிற்துறைகளிலும் மிகப் பெரிய ஜாம்பவான்களை இணைக்கும் இந்த ஒத்துழைப்பின் மூலம், பாதுகாப்பான மிகச் சிறந்த பட்டியல் கொடுப்பனவு வசதிகளை அறிமுகப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இலங்கை வங்கி மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் என்பனவற்றுக்கு இடையிலான குறித்த ஒப்பந்தங்கள் SLT யின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கித்தி பெரேரா மற்றும் இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் திரு. சுகத் குணசேகர ஆகியோருக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. SLT யின் குழும பிரதம நிதி அதிகாரி திரு. சஞ்ஜீவ சமரநாயக்க மற்றும் இலங்கை வங்கியின் உதவிப் பொது முகாமையாளர் திரு. அருண குமார ஆகியோரும், இரண்டு நிறுவனங்களின் பல்வேறு தரங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு இடம்பெற்ற வைபவத்தில் கருத்து வெளியிட்ட இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் திரு. சுகத் குணசேகர, ‘SLT உடன் இணைந்து இலங்கையின் முதலாவது Dynamic QR  பட்டியல் கொடுப்பனவு வசதிகளை அறிமுகப்படுத்தி, மக்களுக்கு புரட்சிகரமான ஒரு அறிமுகத்தைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் பெருமையடைகின்றோம். இப்போது வாடிக்கையாளர்களுக்கு தமது பட்டியல் கொடுப்பனவுகளை எப்போதும் எந்தவொரு இடத்திலிருந்தும் வெறுமனே ஒரு கிளிக் மூலம் BOC SmartPay  அல்லது Lanka QR சான்றிதழ் பெற்ற எந்தவொரு கொடுப்பனவு App மூலமாகவும் மேற்கொள்ளும் வசதிகளை அனுபவிக்க முடியும். அண்மையில் நாட்டில் நிலவிய தொற்று நோய் நிலைமைகளினால் வாடிக்கையாளர்களிடையே டிஜிட்டல் வங்கிச் செயற்பாடுகள் தொடர்பாக சிறந்த வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் அந்த டிஜிட்டல் செயற்பாடுகளின் புதிய கண்டுபிடிப்புக்களும் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. COVID 19 இன் பின்னர் ‘புதிய சாதாரண நிலை’ இவ்வாறுதான் இருக்கப் போகின்றது’ என்று கூறினார்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய ளுடுவு யின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கித்தி பெரேரா, ‘எப்போதும் மாற்றங்களையும், புதிய கண்டுபிடிப்புக்களையும் அறிமுகப்படுத்தி வரும் தொலைத் தொடர்புத் தொழிற்துறையைப் பொறுத்த வரையில், எமது உற்பத்திகளையும் சேவைகளையும் எப்போதும் இற்றைப்படுத்தி வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதே SLT யின் குறிக்கோளாகும். Dynamic QR Cord பட்டியல் கொடுப்பனவு வசதிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு பணப் பயன்பாடு அற்ற பாதுகாப்பான நடவடிக்கைகளுக்கு மேலும் வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச தொழில்நுட்பத்துடன் இணைந்து முன்னோக்கிச் செல்வது மிக முக்கியமாகும். SLT ஆகிய நாம், எமது சமுதாயத்தில் தொழில்நுட்ப அறிவைப் பெற்ற மக்களை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளோம். அதனைச் செய்யக்கூடிய மிகச் சிறந்த இடத்தில் நாங்களே இருப்பதனால், அதனை நாம் மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகிறோம். QR Code பட்டியல் செலுத்தும் வசதிகளை அனுபவிக்கும் அதேவேளை, எமது வாடிக்கையாளர்களிடையே புதியதொரு பாவனை முறையையும் நாம் இதன் மூலம் உருவாக்குகின்றோம்’ என்று கூறினார்.

நாட்டின் மிகவும் நம்பகமான வங்கிகள் ஊடாக இந்தப் பங்காளித்துவம் மேற்கொள்ளப் பட்டிருப்பதனால், இந்தக் கொடுப்பனவு முறை மிகவும் பாதுகாப்பான ஒன்று என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இலங்கை வங்கியின் பொது முகாமையாளர். திரு. சுகத் குணசேகர (இடது) மற்றும் SLT யின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கித்தி பெரேரா ஆகியோர் SLT மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57