பாடசாலை மாணவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்பு ; கொலையா? தற்கொலையா ?

Published By: Raam

14 Jul, 2016 | 10:39 PM
image

ரி.விரூஷன்
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை மாணவன் ஒருவன் கிணற்றுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தற்கொலை என பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது தற்கொலையல்ல கொலையென்ற சந்தேகத்தில் இறந்த பாடசாலை மாணவனது உறவினர்களால் யாழ் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மே மாதம் 24ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் 16 வயதான பாடசாலை மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிதண்ணீர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்த வட்டுக்கோட்டை பொலிஸார், குறித்த பகுதியில் உள்ள பெண்ணொருவரும் இளைஞன் ஒருவனும் காதல் தொடர்புகொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் குறித்த இளைஞன் அவர்களுக்கு உதவி செய்திருந்ததாகவும் அதனடிப்படையில் குறித்த பெண்ணின் தந்தைக்கும் இவ் மாணவனது குடும்பத்திற்குமிடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த சம்பவத்தால் மனவேதனை அடைந்தமையாலேயே குறித்த மாணவன் கிணற்றுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்திருந்தனர். இருந்த போதிலும் குறித்த சம்பவம் தற்கொலையல்ல கொலை என்ற சந்தேகம் நிலவுவதாக குறித்த மாணவனின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட மனிதவுரிமை ஆணையாளரை தொடர்புகொண்டு வினவியபோது,

குறித்த உறவினர்களால் முறைப்பாடொன்று கிடைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து இவ் சம்பவத்தை விசாரணை செய்த வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து இவ் விசாரணை அறிக்கை தொடர்பான விளக்கத்தை கோரியிருந்தோம். அவர்கள் அவ் விளக்க அறிக்கையை சமர்பித்துள்ளார்கள். இதனைவிட சட்ட வைத்திய அதிகாரியிடமும் இவ் சம்பவம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் முறைப்பாட்டாளருடைய நிலைப்பாட்டை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43