நெடுந்தீவில் நடைபெற்ற வடமாகாணசபையின் குறைநிவர்த்தி நடமாடும் சேவை

Published By: Raam

14 Jul, 2016 | 10:04 PM
image

வடமாகாணசபை யாழ் மாவட்ட செயலகத்துடன் இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் இன்று வியாழக்கிழமை குறைநிவர்த்தி நடமாடும் சேவையினை நடாத்தியுள்ளது.

இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் அமைச்சு,விவசாய அமைச்சு,சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்கள் பங்கேற்றிருந்தன. 

இவற்றோடு, நில அளவைத் திணைக்களம்,தொழில் திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம்,தொல்பொருளியல் திணைக்களம்,கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்,ஆட்பதிவுத் திணைக்களம் உட்பட மத்திய அரசுக்குட்பட்ட பல்வேறு திணைக்களங்களும் கலந்துகொண்டு தங்கள் சேவைகளை வழங்கியிருந்தன.

வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இக்குறைநிவர்த்தி நடமாடும் சேவையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினாகள் விந்தன் கனகரத்தினம்,சு.பசுபதிப்பிள்ளைரூபவ் வே.சிவயோகன் ஆகியோருடன் திணைக்கள அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

பின்தங்கிய பிரதேசங்களுக்கு நேரடியாகச்சென்று அவர்களது தேவைகளை நிறைவேற்றிவைப்பதெற்கென வடக்கு மாகாணசபையால் மாவட்டச் செயலகங்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுவரும் குறைநிவர்த்தி நடமாடும் சேவைத்தொடரில் நெடுந்தீவில் இடம்பெற்றது 6வது குறைநிவர்த்தி நடமாடும் சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாவது குறைநிவர்த்தி நடமாடும் சேவை விரைவில் மருதங்கேணி பிரதேச செயலகப்பிரிவில் இடம்பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32