பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் - கடுமையாக சாடும் ஐ.தே.க

13 Sep, 2020 | 04:36 PM
image

(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தின் உயரிய  கௌரவத்தையும் அதன் சிறப்பு தன்மையையும் சீரழித்து செயற்படும்  சபாநாயகரின் மரண தண்டணை கைதி தொடர்பான தீர்மானத்தை விலக்கிக்கொள்ள வேண்டும். அவ்வாறு அல்லாதுப்போனால் எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியிப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர்  பாராளுமன்ற உறுப்பினராக சட்டப்பூர்வமாக பதியேற்ற சந்தர்ப்பம் இதற்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றதில்லை. பிரேமலால் ஜயசேகர என்ற குற்றவாளியை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க பல தரப்பினர் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.

இந்த நீதிமன்றம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த நியமனத்தின் சட்ட அங்கிகாரம் மற்றும் அங்கிகாரமற்ற தன்மை குறித்தோ  அல்லாது அவரது தகுதியற்ற தன்மை குறித்து கேள்விக்கு உட்படுத்தாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறைச்சாலைகள் ஆணையாளரின் சர்சசைக்குறிய கடிதத்தில் சவாலுக்கு உட்படுத்தியுள்ள நிர்வாக சட்டங்களில் மாத்திரம் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பாராளுமன்ற அமர்வு மற்றும் வாக்களிப்பு  போன்ற விடயதாணங்கள் இந்த நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட மாட்டது என்பதுடன் இந்த நெருக்கடிக்கான தீர்வை சபாநாயகர் அல்லது வேறு நீதிமன்றில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள முடியும் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றம் அனுமதி வழங்க வில்லை. இதே தன்மையுடைய சரத் பொன்சேகாவின் வழக்கில் ,  89 ஆவது அரசியலமைப்பிற்கு அமைவாக சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்புரிமையை பெற தகுதியற்றவராக சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தீர்வை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்று செயற்பட்டிருக்க வில்லை. அவ்வாறானதொரு சட்ட தன்மையும் அங்கில்லை.

எனவே  பிரேமலால் விடயத்தில் சபாநாயகர் தனது தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும். அவ்வாறு அல்லாது பாராளுமன்றத்தின் உயரிய தன்மையை சீரழித்து செயற்படும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரியைமை பெறும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10