தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி

Published By: Vishnu

13 Sep, 2020 | 12:01 PM
image

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவுக்கு மேற்கே கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் (124 மைல்) தொலைவில் உள்ள கமிட்டுகா நகரில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளது.

இதனால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சனிக்கிழமையன்று ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டிய தெற்கு கிவு மாகாணத்தின் ஆளுனர் தியோ காசி, அவர்களின் விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.

எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நடவடிக்கையும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெய்த கனமழையால் தங்கச் சுரங்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள என்ஜாலி நதியின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47