20தொடர்பில் தீர்மானமில்லை! முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்ன ?

13 Sep, 2020 | 10:00 AM
image

(ஆர்.ராம்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க வேண்டுமென்று அதன் உயர்பீடக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

அதேநேரம், 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக அரசாங்கம் 20ஆவது திருத்தசட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்தி மாற்றயமைக்கவுள்ள நிலையில் முழுமையான மாற்றங்கள் இடம்பெற்ற பின்னரே இறுதி தீர்மானம் எடுப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடக்குழு கூட்டம் நேற்று முன்தினம் இரவு அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகள் தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது.

அதன்போது, வன்னிமாவட்டத்தில்தேர்தலில் போட்டியிட்டிருந்த ஹுனைஸ் பாரூக், தன்னை திட்டமிட்ட வகையில் தோற்கடிக்கப்படுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையை கட்சியின் தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

அத்துடன் அதுபற்றி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதனையடுத்து, சபீக் ரஜாப்டீன், யு.ரி.எம்.அன்வர், ஏ.எம்.பாயிஸ், உயர் பீட உறுப்பினர் இல்லாத கட்சியின் போராளியான தஜுதீன் ஆகிய நால்வர் கொண்ட குழுவொன்று ஹுனைஸ் பாரூக்கின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கட்சியின் பிரதிதலைவர்களான நஸீர் அஹமட் மற்றும் ஹரீஸ் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக அம்பாறை மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் வாக்காளர்களின் மனநிலை தொர்பிலும் ஹரீஸ் கருத்துக்களை முன்வைத்ததோடு,  கட்சிக்கும் தலைமைக்கும் மாற்றான நிலைப்பாடுகளை எடுக்கப்போவதில்லை என்ற தொனிப்படக் கூறினார்.

அதேநேரம், நஸீர் அஹமட், தற்போதிருக்கின்ற சூழலில் யதார்த்தமான முடிவுகளை நோக்கி நகரவேண்டும் என்ற தொனிப்பட கருத்துக்களை வெளியிட்டார்.

இதனையடுத்து, சஜித் பிரேமதாஸவும் மு.காவிற்கு வழங்கிய வாக்குறுதிகளை மறுதலித்து விட்டதாகவும் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மு.காவின் பங்களிப்பினை அவர் மறந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுப்பினர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தென்னிலங்கைக்காக அந்த தரப்பும் இனவாத போக்கினை கையிலெடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் மு.கா.சுயாதீன அணியாக செயற்படுவதே பொருத்தமானதாக இருக்கும் என்றும் அதுபற்றிய தீர்மானங்களை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக மு.கா தனது நிலைப்பாடுகளை எவ்வாறு பிரதிபலிப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டபோதும் அரசாங்கம் 20ஆவது திருத்தம் சம்பந்தமாக மீளாய்வு செய்யவுள்ளமையால் அதன் பின்னர் இறுதி முடிவினை எடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டதோடு சட்டத்தரணிகள் அதுபற்றி அதீத கரிசனை கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உயர் பீடத்திற்கு சில புதிய முகங்களும் இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58