அண்மையில் பாசிக்குடாவில் இடம்பெற்ற சுற்றுலா துறையில் அபிவிருத்தியும் நல்லிணக்கம் எனும் துணைப்பொருளில் இடம்பெற்ற 50 தேசிய மாநாட்டில் சுற்றுலா துறை அபிவிருத்தி க்காக கிழக்கில் எந்த காணியையும் வழங்க தயார் என தெரிவித்துள்ளார்.

ஆனாலும் வடக்கு கிழக்கில் இந்த காணி அபகரிப்பின் மூலம் எத்தனை மீனவர்களது வாழ்க்கை சீரழிய போகுதென்பதை கிழக்கு முதல்வர் கவனத்தில் கொள்ள வில்லை என்று காணி உரிமைகளுக்காக போராடும் பிரஜா அபிலாஷை அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

அபிவிருத்தி நல்லிணக்கம் என சொல்லிக் கொண்டு பாசிக்குடாவில் அதிகமான தமிழர்கள் இருக்கின்ற இடத்தில் மாநாட்டில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப் பட்டுள்ளது மற்றும் தேசிய கருமா மொழி தமிழ் சிங்களம் என்று சொல்லப்பட் ட போதிலும் மாநாடு முழுக்க சிங்களத்திலும் ,ஆங்கிலத்திலும் நடத்தியமை நல்லிணக்கமா என கேள்வி எழுப்பியுள்ளது .

பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது 1 மீனவனையோ ,சிறு விடுதி அமைப்புக்களுக்கோ மாநாட்டில் தங்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி கருத்து தெரிவிக்க அனுமதிக்க வில்லை .

இன்று இலங்கை முழுவதும் பாதுகாப்பு படையினர் விடுதிகளை அமைத்து வருகின்றனர் மக்களது காணிகளை அபகரித்து உள்ளனர் கடற் படை முகாம் எனும் போர்வையில் சிறு சிறு விடுதிகள் அமைத்து இலாபம் அடைகின்றனர் இவை எல்லாம் தமிழர்களது காணிகள் என்று கிழக்கு முதல்வருக்கு தெரியாமல் போனது வேடிக்கையாக உள்ளது .

இன்று யுத்தத்துக்கு பின் தமிழர்களது பாரம்பரிய அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன ,உதாரணமாக வடக்கில் மாவீரர் துயிலும் இல்லம் ,திலீபன் நினைவு தூபி, என தமிழர்கள் அடையாளம் அழிக்கப் பட்டு ஆனையிறவில் யுத்த வெற்றி என்று கூறி சிலைகளை அமைத்து சுற்றுலா துறை என்கின்றனர் அது போன்று முள்ளி வாய்க்காள் என இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம் .

இந்த நிலை இன்று இலங்கையில் இருக்கும் போது எவ்வாறு அபிவிருத்தியும் நல்லிணக்கம் தமிழர்களை சென்றடையும் என காணி உரிமைகளுக்காக போராடும் அமைப்பு தெரிவித்துள்ளது