இலங்கை அரசாங்கத்திற்கு அர்ப்பணிப்பு இல்லை : ஐ.நா.வின் முன்னாள் விசேட அறிக்கையாளர்

Published By: R. Kalaichelvan

12 Sep, 2020 | 10:40 AM
image

இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறைக்கு செயற்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் தரப்பில் அர்ப்பணிப்பு இல்லாததைத் தவிர அதனை முன்னெடுப்பதில் வேறெந்தத் தடைகளும் இல்லை என்று உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப் தெரிவித்திருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் உத்தரவாதம் ஆகியவற்றை மேம்படுத்துதல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப்பின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், இலங்கையில் இடைக்கால நீதிப்பொறிமுறைக்கு செயற்பாட்டைப் பொறுத்தவரையில் அரசாங்கத்தின் தரப்பில் அர்ப்பணிப்பு இல்லாததைத் தவிர வேறெந்தத் தடைகளும் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'இடைக்கால நீதிப்பொறிமுறையைத் திட்டமிடுவதிலும் செயற்படுத்துவதிலும் இலங்கை அரசாங்கம் மிகவும் மெத்தனமாக இருப்பது மாத்திரமன்றி, அதன் நடைமுறைகளுக்கான முழுமையான உரித்துடைமையை பொறுப்பேற்பதற்கும் தவறியிருக்கிறது' என்றும் ஐ.நா விசேட அறிக்கையாளர் குறிப்பிட்டுள்ளார்..

உண்மைகளைக் கண்டறிதல், நீதிவழங்கல், இழப்பீடு வழங்கல், உத்தரவாதமளித்தல் ஆகிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் அடைந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய வன்முறைகளுக்கு நிவாரணமளிக்கக்கூடிய முறைகள் குறித்து அரசாங்கத்திற்கும் இலங்கைச்சமூகத்திற்கும் ஆலோசனைகளை வழங்கல் ஆகிய நோக்கங்களுக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 10 - 23 ஆம் திகதிவரை அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஐ.நா விசேட அறிக்கையாளர் பாப்லோ டி கிறீப் இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.

மனித உரிமைகள் விவகாரத்தில் பகுதியளவு இணக்கப்பாடுடைய வரலாற்றையே இலங்கை கொண்டிருக்கிறது. எனினும் உண்மையில் அது முற்றிலும் இணக்கப்பாடற்ற ஒரு நிலையேயாகும்.

அதேவேளை இடைக்கால நீதிப்பொறிமுறை பற்றி விவாதிக்கும் போது, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரினால் தமிழ் மற்றும் சிங்கள சமூகங்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டது போன்று பேசப்படுகின்றது.

அவ்வாறு செய்வது போரினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் ஏனைய சமூகத்தவரையும் புறக்கணிப்பதாகவே அமையும் என்றும் பாப்லோ டி கிறீப் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24