ஆறுமுகனின் நிலைப்பாட்டை விக்கினேஸ்வரன் பின்பற்றினால் அமைதியை பாதுகாக்கலாம் - டயனா கமகே

12 Sep, 2020 | 09:09 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஒருமித்த நாடு, இலங்கையர் என்ற ரீதியில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டார். அவரின் நிலைப்பாட்டை விக்னேஸ்வரனும் பின்பற்றினால் பெற்றுக்கொண்டுள்ள அமைதியை பாதுகாத்துக்கொள்ளலாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்  டயனா கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மீதான அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கு ,கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்  விக்கினேஸ்வரன் மிகவும் இனவாத , மத வாத பேதத்துடன் பேசுவதை கடந்த காலங்களில்  அவதானித்தோம்.

அவருக்கு கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் எம்மைவிட்டு பிரிந்துள்ள  ஆறுமுகன் தொண்டமானின் புத்தகத்தில் பக்கமொன்றை எடுங்கள். அவர் அவரின் மக்களுக்காக சேவை செய்வதற்காக ஜனநாயகத்தை தெரிவு செய்த சிறந்த நபராகும்.

வவுனியா தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் வடக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். வடக்கு , கிழக்கிற்கும் நான் யுத்தத்தின் பின்னர் சென்றுள்ளேன்.

சுதந்திரமடைந்து 73 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதில் 43 வருடங்களை மாத்திரமே அனுபவித்தோம். மிகுதி 30 வருடங்களையும் கொடும் யுத்தத்திலேயே கழித்தோம். வீதியில் செல்ல முடியாதளவுக்கு அச்சத்துடனேயே அந்த காலத்தை கழித்தோம்.

யுத்தத்தால் நாங்கள் பாரியளவுக்கு பின்னுக்கு சென்றோம். இல்லாமல் போன அந்த 30 வருடங்கள் இருந்திருந்திருந்தால் எமது நாடு சிங்கப்பூராகியிருக்கும்.

அதனால் விக்னேஸ்வரன் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், தமிழ் மக்களுக்கு யுத்த மனநிலை அவசியமில்லை.

இனவாதம் , மதவாதம் அவசியமில்லை. இது ஒருமித்த நாடு, இலங்கையர் என்ற ரீதியில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறான நிலைப்பாட்டிலேயே ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டார். அவர் சமாதானம் , நல்லிணக்கத்துடனேயே செயற்பட விரும்பினார்.

இந்நிலையில் விக்கேனஸ்வரனுக்கு சொல்ல விரும்புவது, நீங்கள் இந்த இடத்திற்கு மக்களின் வாக்குகளை பெற்று வந்துள்ளமையானது அந்த மக்களுக்காக வேலை செய்வதற்கே ஆகும்.

அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் , அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியையும் , நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே உங்களின் கடமையாகும். அதனை விடுத்து இனவாதம் , மத வாதத்தை அந்த மக்களின் மனங்களில் புகுத்தி, பெற்றுக்கொண்டுள்ள அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம். நாங்கள் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50