திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் திடீரென தனது காதலி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த காதலி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடலில் 32 இடங்களில் வெட்டு விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது காதலன் வருண் கோயல் என்பவரை காஸியாபாத்தில் வைத்துக் பொலிஸார் கைது செய்துள்ளனர். 28 வயதான இவர் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரும் விவாகரத்து செய்த ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக அப்பெண் திருமணத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். 

ஆனால் வருண் கோயல் அதை விரும்பவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்றும் வாக்குவாதம் வெடிக்கவே கத்தியை எடுத்து சரமாரியாக குத்த ஆரம்பித்தார். பெண்ணின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். பொலிஸார் விரைந்துவந்து அப்பெண் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.