பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள் !

11 Sep, 2020 | 04:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தில் 22 பாரதூரமான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆளும்  தரப்பின் உறுப்பினர்கள், எதிர் தரப்பின் உறுப்பினர்கள் திருத்தத்திற்கு  ஆதரவு வழங்க கையுயர்த்த முன்னர் திருத்தத்தில்  உள்ளடக்கபபட்டுள்ள  ஏற்பாடுகள்  குறித்து  முழுமையாக தெளிவு பெற வேண்டும்.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை துறந்து  நாட்டுக்காகவும், பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும்    பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்  என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்  ரோஹன ஹெட்டியராட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

 பெப்ரல் அமைப்பு  வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

 அரசாங்கம் ஆட்சியமைத்தவுடன் கொள்கைக்கு அமைய  செயற்படுவதும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதும் அவசியமாகும் என்பதை  ஏற்றுக் கொள்கிறோம்.     கொள்கைத்திட்டத்தை செயற்படுத்தும் போது  எழும் முரண்பாடுகளுக்கு    பேச்சுவாத்தையின் ஊடாக  தீர்வு காண வேண்டும். அதுவே  ஜனநாயகமாக அரசாங்கத்தின் இலட்சினமாகும்.

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தொடர்ந்து நாட்டு மக்கள்  அரசியல்  கட்சி வேறுப்பாடுகளின்றி ஜனாதிபதி கோத்தபய    ராஜபக்ஷவின் செயற்பாடுகளை   ஏற்றுக் கொண்டார்கள். இதுவே  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  கடந்த மாதம் ( ஆகஸ்ட்) பொதுத்தேர்தலில்  அமோக வெற்றிப் பெறுவதற்கு  பிரதான காரணியாக அமைந்தது.   அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் சட்ட மூல வரைபில்   உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு சில   ஏற்பாடுகள்  அரசாங்கத்தின் மீது மக்கள்  கொண்டுள்ள நம்பிக்கையை  கேள்விக்குட்படுத்தியுள்ளது என்பது எமது  நிலைப்பாடாகும்.

 அரசியலமைப்பின் 19வது திருத்த்ததை இரத்து செய்வதாக  ஆளும் தரப்பினர்  இடம்பெற்று முடிந்த  இரண்டு பிரதான  தேசிய தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். மக்களின் ஆணையின் பிரகாரம் 19வது திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும். 20வது திருத்தம் உருவாக்கப்படும் போது மக்களின் அபிப்ராயங்கள் குறித்து  மிக  கவனமாக ஆராயப்பட வேண்டும்.இவ்வாறான தன்மை செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே       அரசியமைப்பு திருத்தம் சிறந்ததாக  காணப்படும் அத்துடன்  அரச  நிர்வாகமும் சிறந்த முறையில்   அமையும்.

    ஆளும்  தரப்பின் உறுப்பினர்கள்.  எதிர்கட்சியின் உறுப்பினர்கள்   அரசியலமைப்பின்  20வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னர் திருத்தம் தொடர்பில் பலமுறை பரிசீலனை செய்ய வேண்டும்.மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் மக்கள் பிரதிநிதிகள்   தங்களின் அரசியல் கட்சிகளின் தேவைகளை துறந்து நாட்டின் எதிர்காலம் குறித்து    அவதானம் செலுத்த வேண்டும்.   ஜனநாயகத்துக்கு பாதிப்பை  ஏற்படுத்தும்  ஏற்பாடுகள்   அனைத்து மட்ட பேச்சுவார்த்தை ஊடாக  திருத்தம் செய்யப்பட வேண்டும்.

 அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் 22 ஏற்பாடுகளை பெப்ரல் அமைப்பு    மிகவும் பாரதூரமான  ஏற்பாடாக அடையாளப்படுத்தியுள்ளது.  சுயாதீனமாக செயற்பட வேண்டிய  நிறுவனங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.  விசேடமாக  தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமணம், தேர்தல் காலத்தில் அரச சேவைக்கான நியமணம், மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள்   நீக்கப்பட்டுள்ளமை  பாரதூரமான செயற்பாடாகும்.

  அத்.துடன்  அரசியலமைப்பின்  154 ஆவது பிரிவுக்கு அமைய  அரச நிறுவணங்களின் கணக்காய்வு  தொடர்பில்  கணக்காளர் நாயகத்துக்கு  வழங்கப்பட்ட அதிகாரம்    இரத்து செய்யப்படவுள்ளது.  இதனால்    அரச நிர்வாகம் தொடர்பில்  பாராளுமன்றத்துக்கு  உள்ள அதிகாரம் இல்லாதொழிக்கப்படும்.  அத்துடன்  இலங்கை விமான சேவைகள் நிறுவனம்,  லிட்ரோ   நிறுவனம்,  சீனி நிறுவனம்     மின்சார வழங்கல் நிறுவனம்   ஆகிய    நிறுவனங்கள் , 100 அரச  நிறுவனங்கள் தொடர்பில்   பாராளுமன்றத்துக்கு உள்ள அதிகாரம் 20வது திருத்தத்தினால்   இரத்து செய்யப்படலாம்.

தேசிய பெறுகை ஆணைக்குழு நீக்கம், பாராளுமன்றத்துக்கு   ஜனாதிபதி  பொறுப்பு  கூற தேவையில்லை, அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்தல், பாராளுமன்றம் 1 வருடத்துக்கு பிறகு ஜனாதிபதி விரும்பும் போது  கலைத்தல்,   இரட்டை  குடியுரிமை  உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்,  ஆகிய  விடயங்கள்   திருத்தம்  செய்யப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.

நாட்டுக்கான   சட்டம் இயற்றும் போது  பின்பற்ற விடயங்கள்  தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்  அவதானம் செலுத்த வேண்டும்.       ஆளும்  தரப்பினரும்,  எதிர் தரப்பினரும் அரசியல் கட்சி நிலைப்பாடுகளை  துறந்து   20வது திருத்தில்  உள்ளடக்கப்பட்டுள்ள பாதக  ஏற்பாடுகளை   பகிரங்கமாக சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ள  ஒத்துழைக்க வேண்டும்.

 அரசியலைப்பின் 18வது திருத்தத்தை  நிறைவேற்ற ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னர்  மக்களிடம் மன்னிப்பு கோரினார்கள். 19வது திருத்தத்தை ஒரு  பாராளுமன்ற உறுப்பினர் தவிர ஏனைய  உறுப்பினர்கள் அனைவரும்   ஏற்றுக் கொண்டு ஆதரவு வழங்கினார்கள். இன்று மீண்டும் புதிய  திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளது . இவ்வாறான நிலையில்     நாட்டின் எதிர்காலம்,  பாராமன்றின்  ஜனநாயம் குறித்து  பாராளுமன்ற உறுப்பினர்கள்  அவதானம் செலுத்த வேண்டும்.

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31