நாட்டுக்கான  தேசிய வர்த்தக கொள்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் உருவாக்கப்படும் என சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது,  

அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள்  உள்வாங்கப்பட்டு இந்தக் கொள்கை உருவாக்கப்படும் என்பதோடு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.     இலங்கைக்கு பாதக நிலைமை ஏற்படக்கூடிய உடன்படிக்கைகளில் அரசாங்கம் கைச்சாத்திடப்படப் போவதில்லை.   

இந்தியா மற்றும்  இலங்கைக்கு இடையிலான எட்கா உடன்படிக்கை குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.  நாட்டுக்கு மிகவும் பொருத்தமானதும் நன்மை ஏற்படக் கூடியதுமான ஓர்  வர்த்தக கொள்கை  நாட்டில் உருவாக்கப்படும் என அவர்  மேலும் தெரிவித்தார்.