சட்ட விரோத  வன விலங்கு  வேட்டையில் ஈடுபட்ட ஐவர் கைது

Published By: R. Kalaichelvan

11 Sep, 2020 | 03:49 PM
image

சட்ட விரோதமாக இறைச்சி வேட்டடையாடிய  ஐவர்  நேற்று பிற்பகல் உஹண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லாத்துகல - நுவரகல வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சட்ட விரோதமாக இறைச்சிகளை வேட்டையாடிய சந்தேகநபர்கள் ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து வேட்டையாடப் பயன்படுத்திய உள்நாட்டு துப்பாக்கி 1 மற்றும் வேட்டையாடிய 5 கிலோ 310 கிராம் இறைச்சி ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு எந்த விலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அம்பாறை வனஜீவ ராசி திணைக்கள அதிகாரிகள் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.  உஹண பகுதியைச் சேர்ந்த 32, 34, 35, 38 மற்றும் 44 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47