நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு  ஊழலுக்கு எதிரான குரல்  அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015 ஆம் அண்டு நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவின் போது முன்னாள் மின்வலு சக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க 1,803 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான  முறைப்பாட்டினை இன்று ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தில்  முன்வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊழலுக்கு எதிரான அமைப்பு மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்  மேலும் சுட்டிக்காட்டினார்.