பொய்யான குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டுள்ளன 

Published By: MD.Lucias

10 Dec, 2015 | 10:30 AM
image

இலங்கை போக்குவரத்து சேவைக்காக 2200 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது மோசடிகள் இடம்பெற்றதாக பொய்யான குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம எவ்விதமான விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இ.போ.சவில் பணிபுரியும் 278 பேர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது கடற்றொழில் நீரியல் வளத்துறை, போக்குவரத்து, சிவில் விமான சேவை மற்றும் கப்பற்துறை அமைச்சர் தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை போக்குவரத்து துறை சேவையில் ஈடுபடுத்துவதற்காக 2200 பஸ்களை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் ஐவர் கொண்ட அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் குழு என்பன நியமிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டன. எனது சொந்த தேவைக்காக இவற்றைக் கொள்வனவு செய்யவில்லை. முறையான வகையிலேயே கொள்வனவுகள் இடம்பெற்றன.

இதில் 10 ஆயிரம் டொலர்களை நான் கையகப்படுத்தியதாக கூறுகின்றார்கள். இது முழுமையான பொய்யான தகவலாகும். அவ்வாறாயின் அது தொடர்பிலான எவ்விதமாக விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு தயாராகவுள்ளேன்.

குறித்த 2200 பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது 1200 டொலர்களை திறைசேரியும் ஆயிரம் டொலர்களை இலங்கை போக்குவரத்து சபையின் வருமானத்தில் வருடாந்தம் செலுத்துவதாகவும் இணக்கம் காணப்பட்டிருந்தமையையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையில் அதிகளவில் ஆட்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டுகின்றார்கள். 2014 ஆம் ஆண்டு இ.போ.சபையில் 34763 ஊழியர்கள் காணப்பட்டனர். நாம் நடத்துனர்கள், சாரதிகள், திருத்துனர்கள் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்புகளை தேவைகளின் அடிப்படையில் மேற்கொண்டிருப்பதோம். ஆனால் புதிய அரசாங்கம் பதவியேற்ற ஐந்து மாத காலப்பகுதியிலேயே அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய ஆட்சியில் 278 பேர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் எல்.டபிள்யூ. ஆர். பண்டார நாயக்கவின் காலத்தில் அமைக்கப்பட்ட மட்டக்குளி இலங்கைப் போக்குவரத்து சபைக்கான காணியை விற்பனை செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆகவே இவ்வாறான விடயங்களை உடன்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

புகையிரதத் துறைக்கு புதிய நியமனங்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கோட்டை முதல் அவிசாவளை வரை நேரான பாதையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாகவில்லை. அப்பாதை அமைக்கும் நடவடிக்கைகளின் போது பாதிக்கப்படும் குடும்பத்துக்கான இழப்பீடுகள் உரிய முறையில் வழங்கப்படவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35