நியு டயமன் கப்பலின் நிலைவரம் குறித்து ஆராய விஷேட நிபுணர் குழு வருகை!

10 Sep, 2020 | 04:13 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கைக் கடலில் தீ விபத்திற்குள்ளான நியு டயமன் கப்பல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சிங்கப்பூரிலிருந்து டக் இயந்திரம் மூலம் விஷேட நிபுணர் குழுவொன்று இன்று  வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்ததுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

சிங்கப்பூரிலுள்ள சர்வதேச நிறுவனமான தனியார் நிறுவனத்தின் மீட்பு பிரிவின் விஷேட நிபுணர்களான இந்த குழுவினர் விபத்துக்குள்ளான கப்பலுக்குச் சென்று ஆராய்வர். நியு டயமன் கப்பல் தற்போது கரையிலிருந்து 50 கடல் மைல் தூரத்திற்கு ஆழ் கடல் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.

கப்பலுக்கு பின்னாலுள்ள கடற்பரப்பில் எண்ணெய் படர்ந்துள்ளதை விமானப் படையினர் அவதானித்ததையடுத்து கடலில் படர்ந்துள்ள எண்ணெய் காரணமாக சமுத்திர சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இன்று முதல் இந்திய கரையோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ட்ரோனியர் ரக விமானம் இரசாயனம் விசுறும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

கப்பல் காணப்படுகின்ற பகுதியிலிருந்து பெறப்பட்டுள்ள எண்ணெய் மாதிரிகள் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த குழுவினரால் சோதனைக்குட்படுத்தப்படும். மேலும் கப்பலின் தற்போதைய நிலைவரம் குறித்து ஆராய்வதற்காக கடல் மேற்பரப்பில் இறங்கும் விமானமொன்று இன்று காலை 10 மணியளவில் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதே வேளை சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர , இலங்கை கடற்பரப்பிற்கு பாதிப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நியு டயமன் கப்பலை தற்போதுள்ள கடற்பரப்பிலிருந்து நகர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கப்பல் உரிமையாளரான நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38