ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட 10 பேர் கைது  

Published By: Digital Desk 4

10 Sep, 2020 | 01:13 PM
image

நாட்டின் பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரொயினுடன் பெண்னொருவர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இமதுவ

இமதுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இமதுவ - எல்லகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதான நபரொருவர் ஹெரோயினுடன் சந்தெகநபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 1 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் , 37,500 ரூபா பணம் , கைத்தொலைபேசிகள் 4 மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

பாதுக்கை

பாதுக்கை பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 350 கிராம் ஹெரோயினுடன் அக்குரெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதே பகுதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் போது வெல்லவாய மற்றும் தலங்கம பிரதேசங்களைச் சேர்ந்த 28 வயதுடைய மேலும் இரு சந்தேகநபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 40 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. 

கல்கிஸ்ஸ

பொலிஸ் அதிகாரியாக தன்னைக் காட்டிக்கொண்டு ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 34 வயதான சந்தேகநபரொருவர் புதன்கிழமை கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அத்திடிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரியாகக் காட்டி இரகசியமாக ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டு வந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து 1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், போலி இலக்கத் தகடுடனான மோட்டார் சைக்கிள் மற்றும் போலியான பொலிஸ் தலைக்கவசம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

பாணந்துறை

பாணந்துறை வடக்கு - கொரகான சந்தி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ரிவிதெவிகம - வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரொருவர் 1 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொரொன்துடுவ

மொரொன்துடுவ - நுகேகொட சந்தியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்தேகநபரொருவர் 2 கிராம் 840 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே பகுதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது 2 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயினுடன் நுகேகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதான மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராவணாவத்த

கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைளின் போது கல்கிஸ்ஸ - இராவணாவத்த பகுதியில் 3 கிராம் ஹெரோயினுடன் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பன்னல

பன்னல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய எலபடகம - பம்மன்ன சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான காரொன்று நிறுத்தி சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 100 கிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேற்குறித்த கைதுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04