கல்முனை மாநகர சபையின் செயலால், குடியிருப்புகளுக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்! மக்கள் விசனம்

Published By: Jayanthy

10 Sep, 2020 | 12:13 PM
image

கல்முனை மாநகர சபையினால் கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் தினமும் கொட்டப்படும் திண்மக்கழிவுகளினால்  தொடர்மாடி குடியிருப்பில் வாழும் மக்கள் பல அசௌகரியங்களை  எதிர்கொள்வதாக அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு  கொட்டப்படும் குப்பைகளை உண்பதற்காகவே அன்றாடம் சுமார் 35 க்கும்  மேற்பட்ட  காட்டுயானைகள்  கூட்டமாக குடியிருப்புகளுக்குள் வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை(8) இரவு சுமார் 15 யானைகள் குறித்த குடியிருப்புக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. கல்முனை மாநகர சபையினால் அங்கு கொட்டப்படுகின்ற குப்பை கூழங்கள்களை உண்பதற்காக பகல் வேளைகளிலும் இரவு நேரங்களிலும் யானைக்கூட்டம் தொடர்ந்தும்  படையெடுத்து வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் அந்த யானைக் கூட்டங்கள் தொடர்மாடி குடியிருப்புக்குள் ஊடுருவதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருவதுடன் இரவு நேரங்களிலும் அதிகாலைப் பொழுதிலும்  மீனவர்கள் தம் தொழிலுக்கு செல்வதில் சிரமப்படவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் கேட்டுக்கெண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08