மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்க வேண்டும் - வேலுகுமார்

10 Sep, 2020 | 11:42 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

மலையகத்தைச் சேர்ந்த 3 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களையும் ஆசிரியர் நியமனங்களில் உள்வாங்குவதுடன் 150 வருடங்களுக்கு மேலாகப் பெருந்தோட்டதுறையில் ஈடுபட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்  வேலு குமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பெருந்தோட்டத்துறை நாட்டின் முதுகெலும்பாக இருந்து வருகிறது. ஆனாலும் நாட்டில் உருவான ஒவ்வொரு அரசாங்கங்களும் பெருந்தோட்டத்துறை தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால் இத்துறை தொடர்ச்சியாகப் பாதிப்படைந்து வருகிறது.  இது நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெருந்தோட்டதுறையை வளப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும்  ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் 3 ஆயிரம் பேரைக்கொண்டு,  மலையகத் தோட்டப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும். இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தத் தொழில் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் ஆசிரியர் நியமனங்களுக்குள் உள்வாங்கப்படவில்லை.  இவர்களுக்கான கொடுப்பனவுகளும் முறையாக வழங்கப்படுவதில்லை. இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி ஆசிரியர் நியமனங்களுக்குள் அவர்களை உள்வாங்வேண்டும் வேண்டும்.

மேலும் நட்டமடையும் பெருந்தோட்ட நிறுவனங்களை இனங்கண்டு, அந்நிறுவனங்கள் நட்டமடைவதற்கான காரணத்தை அறிந்து அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கத்துக்கு நன்றி செலுத்த வேண்டும். எனினும் இதுதொடர்பானக் கலந்துரையாடல்களில், பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை என்பது கவலையளிக்கிறது. 

மேலும் இந்தக் கலந்துரையாடலின்போது, நட்டமடையும் பெருந்தோட்டங்களை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. இந்நாட்டில் பெருந்தோட்டத்துறையில் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 150வருடங்களுக்கு மேலாக பெருந்தோட்டத்துறையில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27