தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்

Published By: Digital Desk 4

10 Sep, 2020 | 12:40 PM
image

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சடலங்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளன.

இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த  இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லையென அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்த நிலையில்  இன்று காலை பெரியபரந்தன் பகுதியில்  தூக்கில் தொங்கிய  நிலையில் குறித்த இருவரது சடலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்கள் காணப்பட்ட பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்தே சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்ற யுவதியாகும், இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51