சர்வதேச இயன்முறை மருத்துவ தினம்

Published By: Digital Desk 4

09 Sep, 2020 | 08:02 PM
image

இன்று சர்வதேச இயன்முறை மருத்துவ தினம் அனுசரிக்கப்படுகிறது. பிசியோதெரபி எனப்படும் இந்த இயன் முறை மருத்துவத்தின் முறைகளால் ஏராளமானவர்கள் பலனடைந்திருக்கிறார்கள்.

உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து, உடலியக்க குறைபாடுகளைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி என்ற இயன்முறை மருத்துவம் வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளையும், பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதே இதன் சிறப்பு அம்சமாகும். தற்போது இயன்முறை மருத்துவப் பிரிவில் இலத்திரனியல் கருவிகளுடனும், கருவிகளின்றியும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக வலி நிவாரண சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவ சேவை அவசியமாகிறது. முதுகு வலி, தண்டுவடத்தில் சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு நாட்பட்ட அளவில் இயன்முறை மருத்துவ உதவி தேவைப்படும்.

மருத்துவ உலகில் தினமும் பற்பல புதியகண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு இருந்தாலும், சர்க்கரை நோயால் ஏற்படும் தோள்பட்டை வலியால் பொது மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளவும், தோள்ப்பட்டை வலியை குறைக்கவும் பதினைந்து நாட்களுக்குள் இயன்முறை மருத்துவம் மூலம் பாதிக்கப்பட்டவரின் தோள்பட்டையை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரோக்கியமான உடல் திறனுடன் இருக்கவும், உடல் பருமன் மேம்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவும், சத்திர சிகிச்சைகளுக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இயன்முறை மருத்துவம் மிக அத்தியாவசிய தேவையாகி உள்ளது.

உலக முழுவதும் இன்று இயன் முறை மருத்துவ தினம் கொண்டாடும் வேளையில்,‘ இயன்முறை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படவில்லை என்றும், பிசியோதெரபி சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி, அதன் மூலம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே இந்த நாளில் அனைத்து தரப்பு இயன்முறை மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.

டொக்டர் சங்கர்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29