ஒரு தொகை கேரள கஞ்சாவுடன் காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

இன்று காலை காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் மதுவரி திணைக்கள் அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஜவ்பர்கான்