'ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்ததன் மூலம் மத்திய வங்கிக்கு நட்டம் ஏற்படவில்லை': அஜித் நிவாட் கப்ரால்

Published By: J.G.Stephan

09 Sep, 2020 | 12:12 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்ததன மூலம்  மத்திய வங்கிக்கு எந்த நட்டமும் இடம்பெறவில்லை. மாறாக லாபமே இடம்பெற்றிருக்கின்றது. அத்துடன் நான் மத்திய வங்கி ஆளுநராக இருந்த காலத்தில் எந்த ஊழல் மோசடிகளும் இடம்பெறவில்லை என நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மத்திய வங்கி அறிக்கை மீதான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு பதிளலித்து  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2007, 2008 காலப்பகுதியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போவதாக எதிர்வு கூறிக்கொண்டிருந்தார். ஆனால்  எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட பாரிய பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அரசாங்கம் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுக்கும் எனவும் அதன் மூலம் பிரயோசனம் எடுக்க தற்போதும் சிலர் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

2006 முதல் 2014வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5ஆக இருந்தது. ஆனால் கடந்த 5வருடத்தில் இந்த நிலை முற்றாக தலைகீழாக மாறியது. பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியுற்றிருந்தது. இவ்வாறு வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றோம். அன்னியச்செலாவணியை அதிகரித்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

மேலும் 2015இல் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிரச்சினைகளை அதற்கு முன்னிருந்த காலத்திலும் இடம்பெற்றதாக தெரிவித்து எமக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க சிலர் முற்பட்டனர். ஊழியர் சேமலாப நிதியத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு தொடர்பாக சிலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அதன் மூலம் பாரிய நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர். ஆனால் 2011இல் மாத்திரம் இதன் மூலம் 2ஆயிரத்தி 678மில்லியன் ரூபா முதலீட்டு வருமானம் பெற்றுக்கொண்டிருக்கின்றோம். 2012 இல் மத்தியவங்கி இதன் மூலம் 3ஆயிரத்து 16மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொண்டிருக்கின்றது. 2013இல் 3ஆயிரத்து 339மில்லியன் ரூபாவும் 2014இல் 5ஆயிரத்து 544மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஆனால் ஊழியர் சேமலாப நிதியத்தில் ஒருசில பங்குகள் நஷ்டமடைந்திருக்கின்றன. நஷ்டமடைந்திருப்பது தொடர்பாக கதைப்பவர்கள் இலாபமடைந்திருப்பது தொடர்பில் கதைப்பதில்லை. அவ்வாறு நஷ்டமடைந்திருப்பது மொத்தமாக 3ஆயிரத்து 271மில்லியன் ரூபாவாகும். ஆனால் 17ஆயிரத்தி577மில்லியன் ரூபா இலாபமடைந்திருக்கின்றது.

மேலும் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கையில் நான் ஆளுநராக இருந்த காலத்தில் மத்திய வங்கியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக எங்கும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் எனது உறவினர்கள் உயர் நிறுவனங்களில் இருந்தமையால் அவர்களுக்கு என்னால் உதவிகள் செய்திருக்கலாம் என நினைத்தே எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர். மாறாக அந்த குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58