நான் சிறை செல்வதற்கு காரணம் மஹிந்தவே ; அரசாங்கம் தவறான பாதையில் பயணிக்கிறது - பொன்சேகா

09 Sep, 2020 | 06:39 AM
image

(இராஜதுரை ஹஷான்)

சிறை கைதிகளும்  தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.   

ஒரு நாடு - ஒரு  சட்டம் என்ற கொள்கை   பெயரவில் மாத்திரமே செயற்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையை  பலத்தை  தக்கவைக்க  மரண தண்டனை கைதிக்கு பாராளுமன்ற அனுமதி  வழங்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் ஜனநாயகத்தை  மலினப்படுத்தும் செயற்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாகும் என  பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்  மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய  மக்கள் சக்தியின் காரியாலத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மரண  தண்டனை கைதி  பாராளுமன்ற  உறுப்பினராக  சத்தியப்பிரணமானம்  செய்துக் கொண்டமை அரசாங்கம் இனி வரும் காலங்களில் எவ்வாறு செயற்படும்  என்பதை நாட்டு மக்கள்  முனகூட்டியே   அறிந்துக் கொள்ள முடிந்துளளது.  

இனிவரும் காலங்களில் சிறைக்கைதிகளும்  தேர்தலில்  போட்டியிடலாம்  என்ற  நிலைப்பாடு தற்போது தோற்றம் பெற்றுள்ளது..

2010 ஆம் ஆண்டு   நான் சிறை செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  முன்னெடுத்தார்.  

இராணுவ  நீதிமன்றம் இராணுவத்தில் சேவையாற்றிய  உயர் அதிகாரிகளை கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளை  பின்பற்றவில்லை.     இராணுவ   நீதிமன்றம்  முறையான சட்டங்களை  பின்பற்றவில்லை.  அதனால்  இராணுவ  நீதிமன்றம்      அநீதி இழைத்துள்ளது என்றே  குறிப்பிடுவேன்.

 

ஒரு நாடு- ஒரு  சட்டம்  என்று அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்வது  போலித்தனமானது என்பது   மரண தண்டனை கைதி  பிரேமலால் விவகாரத்தில்  வெளிப்பட்டு விட்டது. 

இதனை   நாட்டு மக்கள் எவ்வாறு  ஏற்றுக்கொள்வார்கள் என்பதே எமது கேள்வியாகும்.   தவறான  எடுத்துக்காட்டை நோக்கியே  அரசாங்கம்   பயணிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31