சட்ட விரோத துப்பாக்கி பாவனையாளர்கள் குறித்து தகவல் வழங்குவோருக்கு சன்மானம் - பொலிஸ் பேச்சாளர் 

Published By: Digital Desk 4

08 Sep, 2020 | 08:19 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமாக துப்பாகிகள் உபயோகிப்பவர்கள் தொடர்பில் அறிந்தவர்கள் அவை பற்றி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறு பொலிஸ் தலைமையகம் பொது மக்களிம் கோரியுள்ளது. 

அவ்வாறு தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 000 - 250 000 ரூபாய் வரை சன்மானம் வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரினால் சுற்று நிரூபம் மூலம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் தெளிவுபடுத்தி பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன ,

ஆகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் துப்பாக்கிகள் , வெடிபொருட்கள் மற்றும் வாள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதற்கமைய டி 56 ரக துப்பாக்கி 8, பிஸ்டல் 9, ரிவோல்வர் 2, போர 12 ரக துப்பாக்கி 37, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் 102, நாட்டு துப்பாக்கிகள் 6, துப்பாக்கி ரவைகள் 1227 மற்றும் வாள் 11 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு இவற்றுடன் தொடர்புடைய 130 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று 203 கிராம் வெடிமருந்து , டெனனேடர் 5 மற்றும் கைக்குண்டுகள் 09 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதனுடன் தொடர்புடைய 18 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இம் மாதம் முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் (7) திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் டி 56 துப்பாக்கியொன்று , போர 12 ரக துப்பாக்கிகள் 10, நாட்டுத்துப்பாக்கியொன்று , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் 29, துப்பாக்கி ரவைகள் 32 மற்றும் வாள்கள் 5 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு இவற்றுடன் தொடர்புடைய 39 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று கைக்குண்டுகள் 6 மீட்கப்பட்டுள்ளதோடு அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மிக அதிகளவிலான சட்ட விரோத துப்பாக்கிகள் , ஆயுதங்கள் , வெடிபொருட்கள் என்பவற்றின் பாவனை அதிகரித்துள்ளமையின் காரணமாகவே இவை பற்றிய தகவல்கள் கிடைக்குமாயின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளதோடு சன்மானம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55