மரண தண்டனை கைதி பிரேமலாலிற்கு பாராளுமன்ற அனுமதி வழங்கியமை தவறு..!: ஐக்கிய மக்கள் சக்தி

Published By: J.G.Stephan

08 Sep, 2020 | 04:31 PM
image

(செ.தேன்மொழி)
மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்துக் கொள்வதற்கு இடமளிப்பது தவறான ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, அது தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இரத்தினபுரி நீதி மன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவுக்கு நியமனம் வழங்குவதற்காக அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்நிலையில் அவர் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்கும் அனுமதிபெறப்பட்டுள்ளது. இந்த செயற்பாடானது பிழையான கருத்தை ஏற்படுத்திவிடும்.

மரண தண்டனை கைதி ஒருவருக்கு அரசியலமைப்பின் 89 ஆவது சரத்துக்கமைய அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட தினத்திலிருந்து பிரஜாவுரிமை இல்லாமலாக்க ப்படுவதுடன், அவரால் எந்த தேர்தல்களின் போதும் வாக்களிக்க முடியாது. இதேவேளை அரசியலமைப்பின் 91 ஆவது சரத்துக்கமைய வாக்களிப்பதற்கான உரிமை இல்லாத ஒருவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் கிடைக்கப் பெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் எவ்வாறு பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறான சூழ்நிலையில் மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவுக்கு பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்தால், எதிர்வரும் காலங்களில் கொலை , போதைப் பொருள் கடத்தல் , துஷ்பிரயோகங்கள் செய்து பல வருடகாலம் சிறையில் இருந்தவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அதனால் இது எதிர்வரும் சந்ததியினருக்கு பிழையான அபிப்ராயத்தை ஏற்படுத்தலாம். அதனால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன. இந்த விவகாரம் தொடர்பில் அவரது நிலைப்பட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44