உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு 

Published By: Digital Desk 4

08 Sep, 2020 | 04:22 PM
image

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 4 வெவ்வேறு  வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் 21 திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி. றிஸ்வான்  நேற்று திங்கட்கிழமை (07) உத்தரவிட்டார்.

கடந்த 21.4.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர்; சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த  64 பேர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிகப்பட்ட நிலையில் 59 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்படடுள்ளனர்.

இதேவேளை இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் ஆகிய 4 பேர் உட்பட 68 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த  வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட 68 பேரின்; வழக்குகள் நேற்று திங்கட்கிழமை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்   விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஏனைய 63 பெரும் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினால் காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் 63 பேரையும்; எதிர்வரும் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08