இந்தியாவிலிருந்து படகு மூலமாக கடத்தப்பட்ட கேரள கஞ்சாவினை  ராகமை பகுதியிலிருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகித்து வந்த குழுவொன்றினை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

நேற்று பொலிஸார் மருதானை பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் ஐவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 30 இலட்சம் பெறுமதியான 18 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.