7 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனியை திருடி 3 ஆயிரம் ரூபாவுக்கு அடகு வைத்தவர் கைது!

08 Sep, 2020 | 04:12 PM
image

(செய்திப்பிரிவு)

மலேசியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான மடிக்கணனியை கொள்ளையிட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேநபர் கொள்ளையிட்ட மடிக்கணனியை மூவாயிரம் ரூபாவுக்கு அடகு வைத்து அந்த பணத்தில் ஹெரோயின் கொள்வனவு செய்த போது  நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கிருலப்பனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 8 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலிருந்து தங்க நகைகளை திருடிச் சென்ற குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து ஒரு மாதத்திற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட மடிக்கணனி பொரல்லை பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 49 வயதுடைய பொரல்லை - சகஸ்புர பகுதியைச் சேர்ந்தவராவார். மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31