வாய் புற்றுநோயை தடுக்கும் ப்ரோக்கோலி

Published By: Robert

14 Jul, 2016 | 10:32 AM
image

வாயில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ப்ரோக்கோலி என்ற காய்கறியில் இருப்பதாக பென்சில்வேனியாவை சேர்ந்த பீட்ஸ்பர்க் பல்கலைகழக மருத்துவ அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

பொதுவாகவே முட்டைக்கோஸ், அருகம்புல் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவைகளை உணவில் குறைவாகவே சேர்ப்போம். இவை ஆரோக்கியமானவை என்றாலும் இவற்றை குறைவாகவே உணவில் பயன்படுத்துவோம் அல்லது இதன் சத்துகளை அதிகளவில் வேக வைப்பதன் மூலமாகவோ அல்லது மிக்ஸியில் அடித்து அதன் சத்துக்களை ஆவியாக அனுமதித்த பின்னர் உண்போம். அப்படி செய்யாமல் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தலின் படி மேற்கண்ட காய்கறிகளை குறிப்பாக ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிட்டால், வாய்புற்று நோய் முழுவதுமாக தடுக்கப்படுகிறது.

வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்ஜேரி, கீமோ தெரபி, ரேடியேசன் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வோம். இதன் மூலம் அவர்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும். ஆனால் புற்றுநோயை முழுதாக அகற்றப்படவேண்டும் என்றால் உடலில் புற்றுநோய் செல்களை உருவாக்கும் காரணிகளை அழிக்கவேண்டும். தற்போது அந்த பணியை ப்ரோக்கோலி மேற்கொள்வதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ப்ரோக்கோலியில் உள்ள சல்ஃப்ரோபேன் இத்தகைய புரதங்களை உருவாவதை தடுப்பதுடன் அதனை அழிக்கவும் செய்கிறது. மேலும் இது குறித்த ஆய்வுகள் தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்கும். வாயில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படும். வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்படும். நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களும், வீக்கமாகக் காணப்படும். 

என்ன காரணம்?

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய்தான் அதிக அளவில் இருக்கிறது. இன்று வயது வித்தியாசம், பாலினவேறுபாடு இன்றி பெரும்பாலோர் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கின்றனர். சிகரெட், பீடி, பான்பராக், புகையிலை போன்ற பழக்கங்களால் வாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் தாக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கிறது. காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். குடும்பத்தில் ஒருவருக்குப் புற்றுநோய் இருந்தால் அடுத்து வரும் தலைமுறையில் புற்றுநோயின் தாக்கம் கட்டாயம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அதேநேரம் புற்றுநோய் ஏற்பட மரபு மட்டுமே காரணம் இல்லை. 

எதனை தவிர்க்கவேண்டும்?

ரெட் மீட் எனப்படும் மட்டன், பீஃப் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இவற்றில் புற்றுநோயைத் தூண்டும் காரணிகள் அதிகம்.

எதனை சாப்பிடலாம்?

சில உணவுப் பொருட்களுக்கு நோய்களை எதிர்க்கும் வல்லமை உண்டு. மீன் உணவுகள் ஆபத்தில்லாதது, ஆரோக்கியம் தரும். தாவரங்களில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகளுக்கும், தானிய வகைகளுக்கும் முன்னுரிமை தர வேண்டும். குறிப்பாக ஆண்ட்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த  முட்டைகோஸ், ப்ரோக்கோலி, அருகம்புல் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கண்ணைப் பறிக்கும் நிறங்களில் இருக்கும் பழங்களில் நோய் எதிர்ப்பு சக்திக் காரணிகள் அதிகம். அவை நல்ல தேர்வாக அமையும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

டொக்டர்  V.சுப்ரமணியன்

தொகுப்பு  அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04