மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதி விபத்து ; ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

07 Sep, 2020 | 12:03 PM
image

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்,  நீர்வேலி பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டுள்ளன.

சம்பவத்தில் அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது-63) என்ற வடமராட்சி வலயக் கல்வி அலுவலக முன்னாள் சேவைக்கால ஆசிரியர் ஆலோசகரே உயிரிழந்தவராவார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்த மகாலிங்கம் வின்சன் கோமகன் உயிரிழந்ததுடன், கச்சேரி – நல்லூர் வீதியைச் சேர்ந்த மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27