20ஐ அமுலாக்கி பாசிசவாத ஆட்சியை நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசு - கடுமையாக எதிர்ப்போம் என்கிறார் கஜேந்திரகுமார் எம்.பி

06 Sep, 2020 | 04:16 PM
image

(ஆர்.ராம்)

20ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதன் மூலமாக பாசிசவாத ஆட்சியை நிரந்தரமாக நிறுவும் முனைப்பில் ராஜபக்ஷ அரசாங்கம் சென்றுகொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் அமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது தமிழர்களை புறக்கணித்தே உருவாக்கப்பட்டது என்பதுதான வரலாறு. 

ஆவ்வாறிருக்கையில் தற்போது 20ஆவது திருத்தச்சட்டத்தினை மேற்கொண்டு தனி ஒருவரிடத்தில் அனைத்து அதிகாரங்களையும் குவிக்கும் முனைப்பில் அரசாங்கம் செயற்படுகின்றது. இது நாட்டில் ஒரு பாசிசவாத ஆட்சியை நிலை நிறுவத்துவதையே உள்நோக்கமாக கொண்டதாகும்.

இந்த செயற்பாடானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~களை மேலும் நசுக்கும் ஒரு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். இந்த செயற்பாட்டிற்கு எமது கட்சி கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை பாராளுமன்றத்தின் உள்ளம், வெளியிலும் மேற்கொள்ளவுள்ளோம்.

அதேநேரம், பொதுப்படையாக 20ஆவது திருத்தச்சட்டமானது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் ஒன்றாகவே உள்ளது. நாட்டில் காணப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை எதிர்வரும் காலத்தில் கேள்விக்குறியாக்கும் வகையில் அதற்கான பதவி நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அதேபோன்று பாராளுமன்ற ஜனநாயகமும் கேள்விக்குறியாகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாது இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்தும் தனது குரலை எழுப்பும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58