மஞ்சள் கொள்ளையிட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

05 Sep, 2020 | 05:43 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு - கிரான்பாஸ் பகுதியிலுள்ள  சுங்க திணைக்களத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் மீள் ஏற்றுமதிக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 18,180 கிலோ கிராம் தொகை மஞ்சளை கொள்ளளையிட்டதற்காக கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மஞ்சன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 28 ஆம் திகதி சுங்க திணைக்களத்தினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கிரேண்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன் , பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் போது ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பதுரலிய ,தெமட்டகொட, அம்பலந்தொட்ட , கிரில்லவத்த, வவுனியா மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25-45 ஆகிய வதுக்கிடைப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களால் பயன்படுத்தப்பட்ட வேன்கள் 2 , கார் ஒன்று ,  கொள்ளையிடப்பட்ட 29 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் , 12 கிலோ 500 கிராம் மஞ்சள் தூள் மற்றும் அதில் ஒரு தொகை மஞ்சளை விற்பனை செய்து கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் 45,112,032 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு-11 இல் உள்ள தனியார் நிறுவனமொன்றே குறித்த மஞ்சள் தொகையை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ளது. மஞ்சள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்காக சுங்கத்தினைக்களத்தினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைகளை மேற்கொண்டு மீள் ஏற்றுமதி செய்யும் நோக்கத்திலேயே இவ்வாறு களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 9 சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதுடன். இதன்போது நீதிவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17