4 விடயங்களைத் தவிர ஏனைய அனைத்தும் நீக்கம் : வரலாறு மீளத்திரும்பப்போகிறதா ? - சுமந்திரன்

Published By: R. Kalaichelvan

04 Sep, 2020 | 05:51 PM
image

(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 18 வது திருத்தத்திற்கு எதிரான 2010 செப்டெம்பரில் பாராளுமன்றத்தின் தன்னால் ஆற்றப்பட்ட உரையை மீள நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அதே வரலாறு மீளத்திரும்பப்போகிறதா? என்றும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் நான்கைத் தவிர ஏனைய அனைத்தையும் நீக்கும் வகையில் 20 வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து, அரசியலமைப்பின் 20 வது திருத்தம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனூடாக 19 வது திருத்தத்தில் குறைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் அவருக்கே வழங்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சுமந்திரன், அதில் 'அரசியலமைப்பின் 18 வது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதி நான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியிருந்தேன்' என்று சுட்டிக்காட்டி அவரால் ஆற்றப்பட்ட உரையில் காணொளியையும் அதில் இணைத்திருக்கின்றார். அதனுடன் 'வரலாறு தற்போது மீளத்திரும்பிக்கொண்டிருக்கிறதா?' என்றும் அவர் அந்தப் பதிவில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04