‍நைஜீரியாவில் 22 பேர் சுட்டுக் கொலை!

Published By: Vishnu

04 Sep, 2020 | 12:30 PM
image

நைஜீரியாவின் மத்திய மாநிலமான நைஜரில் துப்பாக்கி ஏந்தியவர்கள் குறைந்தது 22 பேரைக் கொன்றதாக மாநில பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

பலியானவர்கள் உள்ளூர் விழிப்புணர்வு குழுக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆயுதமேந்திய குற்றவியல் கும்பல்களின் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி தாரிகள் டூக்கு நகரில் மோட்டார் சைக்களில் வந்து குடியிருப்பாளர்களை கடத்த திட்டமமிட்டுள்ளனர். அதன் பின்னர் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட விழிப்புணர்வு குழு உறுப்பினர்கள், தாக்குதல் நடத்தியவர்களுடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஓய்வுபெற்ற கேணல் கபிரு மொஹமட் மைக்கூண்டி சுட்டிக்காடாடியுள்ளார்.

புதன்கிழமை மாலை ககாரா நகரில் ஒரு வங்கி மீது துப்பாக்கி ஏந்தியவர்கள் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வரை சுட்டுக்கொன்றனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் துப்பாக்கி ஏந்தியவர்களும் கொல்லப்பட்டதாக நைஜர் மாநில அரசு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர், இருப்பினும் அந்த எண்ணிக்கை இன்னும் தெளிவாக இல்லை.

நைஜர் மாநிலம் மத்திய மற்றும் வடமேற்கு நைஜீரியாவில் பல மாநிலங்களில் ஒன்றாகும், அங்கு ஆயுதமேந்திய குற்றவியல் கும்பல்கள் அடிக்கடி கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முன்னெடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17