20 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு முழுமையான நிறைவேற்று அதிகாரம் - வாசுதேவ நாணயக்கார

Published By: R. Kalaichelvan

04 Sep, 2020 | 11:34 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பலமான அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவே ஜனாதிபதிக்கு    முழுமையான நிறைவேற்றுஅதிகாரம் 20வது திருத்தம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியமைப்புஉருவாக்கத்தில் அனைத்து இன மக்களின் அரசியல் அபிலாசைகளும் உள்வாங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கையை ஜனநாயக இடதுசாரிமுன்னணி சார்பில் அரசியலமைப்பு வரைபு தொடர்பான விசேட  குழுவினரிடம் முன்வைத்துள்ளோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 அவர் மேலும்குறிப்பிடுகையில்,  

 அரசியலமைப்பின் 20வது திருத்தம் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. 19வதுதிருத்தம் பலவீனமான அரச நிர்வாகத்துக்கு பிரதான காரணியாக அமைந்தது. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்களுக்கு  யார் பொறுப்பு கூற வேண்டும் என்ற முரண்பாடுகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறான முரண்பாடுகள் 20வது திருத்தத்தில்   ஒருபோதும் ஏற்படாது.

 முத்துறை அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளதால் அரச நிர்வாகம் பலமாக செயற்படும் என எதிர்பார்க்கிறோம். அரசியலமைப்பின்18வது திருத்தத்தை கடந்த அரசாங்கம் முறையற்ற விதமாகவே இரத்து செய்தது. திருத்தம்  இரத்து செய்யப்பட்டு புதிய திருத்தம் கொண்டு வருவதற்கான  காரணிகள் குறிப்பிடப்படவில்லை.

 அரசியலமைப்பின் 20வது திருத்தம் ஒரு வாரத்தில் நிறைவேற்றப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியின் காரணமாகவே  19வது திருத்தம் நிறைவேற ஆதரவு வழங்கினோம்.

ஒரு வாரம் என்று காலக்கேடுவிதித்தவர். 4 ஆண்டு காலம் கடந்தும்  20வது திருத்தம் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் நல்லாட்சியின் இலட்சினம் என     பெருமைப்பட்டுக் கொண்டவர் ஒக்டோபர் 26 அரசியல்  நெருக்கடிக்கு பிறகு 19 வது திருத்தம் சாபக்கேடு என கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

19வது திருத்தம் நடைமுறையில்பல பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. முத்துறை அதிகாரங்களும் யாருக்கு  என்று பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.

 நாட்டுக்கு பொறுந்தும் விதத்திலான அரசியலமைப்பு திருத்தத்தை  கொண்டு வருவோம் என  இரண்டு பிரதான தேர்தல்கள் ஊடாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினோம். மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி 20வது திருத்தம் ஊடாக நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22