பெய்ரூட் வெடிப்பு சம்பவம்  : ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் ஒருவர் உயிருடன்..

Published By: Jayanthy

04 Sep, 2020 | 11:34 AM
image

பெய்ரூட் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 30 நாட்கள் கடந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் மீட்புப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிலி மீட்புக் குழுவான டோபோஸுடன் பணிபுரியும் ஒரு துப்பரியும் நாய் இடிபாடுகளுக்கு வெளியே இருந்தபடி ஒருவர் உயிருடன் இருப்பதற்கான சமிக்ஞையை வழங்கியதையடுத்து மீட்பு முயற்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து நாட்களாக மீட்பு பணியாளர்களுடன் துப்பரியும் நாய் பணியில் உள்ளது. 

Image

வெடிப்புக்கு முன்னதாக அந்த இடத்தில் காணப்பட்ட நான்கு மாடி கட்டிடம் ஒன்று தற்போது முழுவதுமாக இடிந்து வீழ்ந்துள்ள நிலையில் இதன் இடிபாடுகளுக்கு இடையே ஒருவர் உயிருடன் இருப்பதாக மீட்பு பணியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். 

மீட்பு குழுவினால் குறித்த இடத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பு உபகரணங்கள் இரண்டு உடல்கள் இருப்பதைக் கண்டறிந்தன, இதில் ஒருவர் ஒரு வயது குழந்தையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரில் ஒருவர் மட்டும் உயிருடன் இருப்பதாகவும் அவரின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 18 துடிப்புகளை காட்டுவதாகவும் உபகரணங்கள் கண்டறிந்துள்ளன. 

நேற்று வியாழக்கிழமை தொடங்கப்பட்ட தேடுதல் பணி இடை நிறுத்தப்பட்டு மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு நேரப்படி  அதிகாலை 1 மணிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.

எனினும் பல மணி நேரங்களின் பின் உயிருடன் இருப்பவரின் இதயத்துடிப்பு  ஒரு நிமிடத்திற்கு 10 துடிப்புகளை உபகரணங்கள் காட்டியுள்ளன.

Rescue workers clear rubble from a destroyed building with the aim of finding a potential survivor on September 4, 2020 in Beirut, Lebanon.

ஆரம்பத்தில் இருந்தே பேரழிவிற்கு வாய்ப்பினை ஏற்படுத்திய லெபனான் அதிகாரிகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் முழுமையாக விழிப்புடன் இருந்தார்களா என்பது குறித்து இந்த சம்பவம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கடந்த மாதம் பெய்ரூட்டின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததையடுத்து கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் நகரின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10