நீதி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் விசேட குழு நியமனம்

Published By: Vishnu

03 Sep, 2020 | 07:59 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

போதைப்பொருளுடன் தொடர்புபட்டு சிறைசாலை விளக்குமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதால், அதுதொடர்பில் எடுக்கமுடியுமான தீர்மானம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்க நீதி அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

நீதிஅமைச்சின் மேலதிக செயலாளர் பியுமன்தி பீரிஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த குழுவில் இரசாயன பகுப்பாய்வு திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். 

நீதி அமைச்சின் சட்ட ஆலோசகர்கள் இந்த குழுவின் ஆலாசகர்களாக செயற்படுபவர்.

போதைப்பொருளுடன் தொடர்புபட்டு சிறைசாலை விளக்குமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதால், அதுதொடர்பில் எடுக்க இருக்கும் தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. 

இதில் சிறைச்சாலை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். 

இதன்போதே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் விளக்குமறியல் கைதிகளின் எண்ணிக்கை தற்போது பாரியளவில் அதிகரித்திப்பதால், நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு அவர்களை புனவர்வாழ்வளிப்பது தொடர்பாக இந்த சந்திப்பின்போது பிரதானமாக கலந்துந்துரையாடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56