'நியமனங்களை மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது': ஜனாதிபதி அதிரடி

Published By: J.G.Stephan

03 Sep, 2020 | 03:41 PM
image

(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நியமனங்கள் அனைத்தும் நாட்டின் இறையான்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்துவதற்காக மிகவும் சிறந்த விடயங்களை கருத்திற்கொண்டே வழங்கப்பட்டுள்ளன.

ஆழமாக சிந்தித்து நியமிக்கப்பட்ட நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஒருவரை அதற்காக நியமிப்பதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் தம்மிடம் இல்லை என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நியமிக்கப்பட்டவர்களின் தேசப்பற்று, தகைமைகள் மற்றும் பின்புலம் பரீட்சிக்கப்பட்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கையை சிறப்பாக முன்னெடுப்பதற்கு இயலுமான வகையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சில நியமனங்களுக்கு எதிராக அவற்றை மாற்றுமாறு தமக்கு அல்லது அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டாமென ஜனாதிபதி அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நியமனங்களுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை முன்வைப்பதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகள், விடயதானங்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு முடியாமல் போவதோடு மட்டுமன்றி சமுதாயத்தில் அந்நபர்கள் பற்றி தப்பான எண்ணங்கள் ஏற்படுவதினால் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களும் வீணடிக்கப்படுமென்பதே தனது கருத்தாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41