தனி குடும்ப ஆக்கிரமிப்பிற்கே 19 ஐ இரத்துச் செய்கின்றனர் - காவிந்த

03 Sep, 2020 | 03:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

 பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது. தனி குடும்பம் பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்கவே அரசியலமைப்பின் 19வது  திருத்தம் இரத்து செய்யப்படவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நீக்கியுள்ளமை  எதிர்காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வீழ்ச்சிடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தை  மேம்படுத்தும் எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது. அரசியலமைப்பின்  19 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டைக் கொணடுள்ளது . அதன்    பின்னணியின் ஊடாகவே 20 ஆவது திருத்தம்   கொண்டு வரப்படுகிறது.  நாட்டு மக்கள் பயன் பெறும்  விடயங்கள்  20 இல் குறிப்பிடப்படவில்லை. பாராளுமன்றத்தின்    ஜனநாயகத்தை ஒரு  குடும்பம் ஆக்கிரமிக்கும் ஏற்பாடுகள்  மாத்திரம்  மறைமுகமாக  உள்ளடக்கப்பட்டுள்ளன.

19 இல் உள்ள  சுயாதீன ஆணைக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டன.  2014 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தின் நிலைமை இரண்டாம்  சுற்றாக தற்போது உருவெடுத்துள்ளது.  அரசாங்கத்துக்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கிய மக்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. ஒரு  குடும்பத்தின் தேவைக்காக நாட்டின் அரசியலமைப்பு  திருத்தம்செய்யப்படுவது   இந்நாட்டில் மாத்திரம் இடம் பெறுகிறது.

  20 இல் உள்ளடக்கப்பட்ட விடயங்களை அரசாங்கம் முழுமையாக பகிரங்கப்படுத்தாது. பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர்   பசில் ராஜபக்ஷ  பாராளுமன்ற உறுப்பினராக  வர வேண்டும் என்பதற்காகவே  இரட்டை  குடியுரிமை விவகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகளில அரச நிர்வாகங்களில் இரட்டை  குடியுரிமையினை   கொண்டவர்கள் இணைத்துக் கொள்ளப்படமாடடர்கள்.

  சுயாதீன ஆணைக்குழுக்களை இரத்து  செய்துள்ளமை   மக்களின்   அடிப்படை உரிமைகளுக்கு எதிர்காலத்தில்  பாதிப்பை ஏற்படுத்தும். இவ்விடயம்  தொடர்பில் பொதுமக்கள் அதிக   கவனம்செலுத்த வேண்டும். மக்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில்  தொடர்ந்து குரல் கொடுப்போம்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43