புதிய அரசியலமைப்பை உருவாக்க 8 பேரடங்கிய விசேட நிபுணர் குழுவில் சர்வேஸ்வரன்

Published By: Vishnu

03 Sep, 2020 | 02:52 PM
image

புதிய அரசியலமைப்பின் வரைபைத் தயாரிக்கும் பணிகளுக்காக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையில் எண்மர் அடங்கிய விசேட நிபுணர்கள் குழுவொன்றை அரசாங்கம் நியமித்திருக்கிறது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட குழப்பங்களுக்குத் தீர்வுகாண்பதற்காக முதலில் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதுடன் அதனைத்தொடர்ந்து புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்படும் என்று அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவைத் தயாரிக்கும் பணிகளுக்காக விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி நியமிக்கப்பட்டுள்ள இந்த நிபுணர்கள் குழுவிற்கு சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமைதாங்கும் அதேவேளை குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர த சில்வா, சஞ்சீவ ஜயவர்தன, சமந்த ரத்வத்த, பேராசிரியர் நசீமா கமுர்தீன், கலாநிதி ஏ.சர்வேஸ்வரன், பேராசிரியர் வசந்த செனெவிரத்ன, பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

அரசியலமைப்பின் 20 வது திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்டதுடன் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டமையால் அது அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில, எனினும் புதிய அரசியலமைப்பு என்பது ஒரு நீண்டகால நோக்கிலானது. அதனைத் தயாரிப்பதற்கு சிலகாலம் தேவைப்படும். ஆகவே புதிய அரசியமைப்பைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழுவிற்கு அனைவரும் அறிந்த பிரபலமான சிரேஷ்ட சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமைதாங்குகின்றார் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33