தலிபானியருடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தோஹாவுக்கு செல்லவுள்ள ஆப்கானிய அதிகாரிகள்

Published By: Vishnu

02 Sep, 2020 | 05:42 PM
image

காபூலின் நிர்வாகம் தலிபான் கைதிகளை விடுவிப்பதை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அரசாங்க பேச்சுவார்த்தையாளர்கள் வியாழக்கிழமை கட்டார் தலைநகருக்கு தலிபானுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு புறப்படவுள்ளனர்.

அதன்படி ஆப்கானிஸ்தானிய பேச்சுவார்த்தையாளர்கள் அணி தோஹாவுக்கு நாளை புறப்படுவார்கள் என்று ஆப்கானிஸ்தானின் தேசிய நல்லிணக்கத்திற்கான உயர் கவுன்சிலின் (எச்.சி.என்.ஆர்) தலைவராக இருக்கும் அப்துல்லா அப்துல்லாவின் செய்தித் தொடர்பாளர் பிரைடூன் கவ்ஸூன் ரோய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கத் தயாராவதற்கு முன்னதாக தோஹாவிற்கு ஒரு "சிறிய தொழில்நுட்பக் குழு" அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

320 கைதிகள் அடங்கிய இறுதிக் குழுவை பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு முன்னர் விடுவிக்க வேண்டும் என்று தலிபான் கோரியது.

பெப்ரவரி மாதம் தலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கைதிகளின் விடுவிப்பு அமைந்துள்ளது.

இந் நிலையில் இறுதி இறுதி 400 தலிபான் கைதிகளின் விடுதலையை காபூல் கண்டித்துள்ளது. பிரான்ஸ் உள்ளிட்ட சில மேற்கத்திய அரசாங்கங்களும் தலிபான் கைதிகளை விடுவிப்பதை எதிர்த்தன.

எனினும் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் இந்த வாரம் மேலும் 200‍ பேரை விடுவித்துள்ளது. மொத்தமாக 5,000 தலிபான் கைதிகளில் தற்போது 120 பேர் கைதிகள் மாத்திரம் எஞ்சியுள்ளனர்.

தலிபான் கைதிகளின் விடுவிப்பின் ஒரு பகுதியாக 1,000 அரசாங்க படையினரை விடுவிக்குமாறும் ஆப்கானிய அரசாங்க படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17