முத்தளம்பிட்டி கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 உள்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (12) கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து   7 பைர் கண்ணாடி படகுகள் மற்றும் 8 தங்கூசி வலைகளை கடற்படையினர்  கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

இதேவேளை மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மற்றும் மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.