Creative Isle கொழும்பு சிட்டி சென்டருடன் இணைந்து CAN வார இறுதி நிகழ்வை ஆரம்பித்துள்ளது

01 Sep, 2020 | 01:30 PM
image

கொழும்பு, இலங்கை, ஆகஸ்ட் 2020 - கொழும்பு சிட்டி சென்டருடன் இணைந்து,  3 நாட்களாக இடமபெறவுள்ள Ceylon Artisan Network (CAN) Market என்ற வாராந்த சந்தை நிகழ்வை கொழும்பு சிட்டி சென்டரிலுள்ள Atrium அரங்கில் 2020 ஆகஸ்ட் 28 அன்று Creative Isle ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பூத்த முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளார்.

CAN Market சந்தை நிகழ்வானது நாடெங்கிலுமுள்ள நுண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 முதல் இரவு 9 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும்.

வார இறுதி சந்தையில் இலங்கையின் அனைத்து பகுதிகளையும் சார்ந்த விற்பனையாளர்கள் ஏற்றுமதி தரத்திலான தங்கள் உற்பத்திகளை மொத்த விலையில் காட்சிப்படுத்தி, விற்பனை செய்வதில் ஈடுபடவுள்ளதுடன், அதே நேரத்தில் மொத்தமாக கொள்வனவு செய்பவர்களுடன் புதிய வர்த்தக பங்குடமைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பிற்கும் இது இடமளிக்கும். நிலைபேறு கொண்ட மற்றும் சமூகம் சார்ந்த வணிகங்களை மையமாகக் கொண்ட இந்த சந்தை நிகழ்வில் வீடு மற்றும் வாழ்க்கை முறை உற்பத்திகள், நவநாகரிக அணிகலன்கள், கைவினைஞர்களின் உணவுப் பொருட்கள், மூலிகை தேயிலைகள்; மற்றும் ஆயுள்வேத அழகுசாதனப் பொருட்கள், சவர்க்காரங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவை இடம்பெறும். 

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த முத்தையா முரளிதரன் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “எமது நாட்டில் ஏராளமான தொழில்முயற்சியாண்மையாளர்கள் உள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. அத்தகையவர்களை வலுவூட்டும் பணியையே Foundation of Goodness அறக்கட்டளை ஆற்றி வருகின்றது,” என்று குறிப்பிட்டார்.

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட புகழ்பூத்த வர்த்தகத்துறையாளரும், வர்த்தக நிறுவனங்கள் பலவற்றின் தலைமை அதிகாரியுமான திலித் ஜெயவீர அவர்கள், “தொழில்முயற்சியாண்மை தொடர்பில் நான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதுடன், இந்த முயற்சியை வெகுவாக பாராட்டுகிறேன். உண்மையான தொழில்முயற்சியாளர்கள் மற்றும் பெறுமதி மிக்க புத்தாக்குனர்கள் இலங்கையில் இனங்காணப்பட்டு, உரிய முறையில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெறல் வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.

CAN Market நிகழ்வானது மீள்சுழற்சி மற்றும் தரமேம்பாட்டு-சுழற்சி சார்ந்த முயற்சிகள் மற்றும் உற்பத்திகளுக்கு ஆதரவளிப்பதுடன், படைப்பாற்றல் சார்ந்த தொழில்முனைவோருக்கு அவர்களின் புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் சேவைகளை நுகர்வோருக்கான (B2C) மற்றும் வர்த்தக ஸ்தாபனங்களுக்கான (B2B) சந்தைகளுக்கு வெளிக்காண்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமையும்.

Creative Isle நிறுவனத்தின் ஸ்தாபகரான கேஷினி ஆன் சுரவீர அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் கொவிட்-19 பரவலின் போது ஊரடங்குச் சட்டம் அமுல் நடைமுறையில் இருந்த சமயத்தில் இது உதித்தமை ஆகும். பெரும்பாலான படைப்பாற்றல் சார்ந்த தொழில்முனைவோர் தமது தொழில் வளர்ச்சியில் வீழ்ச்சிப் போக்கை அனுபவித்தபோது, தங்கள் வணிகத்தை திறம்பட தொடர்ந்து முன்னெடுக்கும் முனைவைக் குறைத்தனர். தற்போதைய வணிக சூழலில் உள்ள இடைவெளியைக் கண்டறிந்து, உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு அவர்களின் அசல் திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு களத்தை ஏற்படுத்த நான் விரும்பினேன். இல்லையெனில் தங்களின் ஆற்றலை வெளிக்கொணர்வதற்கான களம் இல்லாமை காரணமாக தமது கண்டுபிடிப்பு, புத்தாக்க முயற்சிகளை கைவிட்டிருக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்,” என்று குறிப்பிட்டார். 

இலங்கையை மேலும் மேம்படுத்துவதற்கும், உலகளாவில் பரவி வருகின்ற கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள அதன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கும், கொழும்பு சிட்டி சென்டர், Foundation of Goodness அறக்கட்டளை, தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் போன்ற பங்காளர்களிடமிருந்து CAN Market நிகழ்வுக்கு பெரும் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முயற்சிக்கு ளுஉழிந ஊiநெஅயள சினிமா பங்காளராகவும், Scope Cinemas சமூக ஊடக பங்காளராகவும் கைகோர்த்துள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58