மலையகத்தில் உரத்தட்டுப்பாடு ; அவதியுறும் விவசாயிகள்

Published By: Digital Desk 4

01 Sep, 2020 | 10:47 AM
image

உரத் தட்டுப்பாட்டால் மலையக பகுதியில் விவசாயத்தில் >ஈடுபட்டுள்ளோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என மலையக பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

கொரோனா பாதிப்புக்கு பிறகு அரசாங்கத்தால் விவசாயம் மேற்கொள்ளுமாறு பணிப்புரையை தொடர்ந்து மலையக பகுதியில் அதிகளவில் விவசாயத்தில் பெருந்தோட்ட கிராம சிறுதோட்ட மக்கள் ஈடுபட்டனர். 

குறிப்பாக நவதிஸ்பன பகுதியில் அதிகளவில் பயிரிடப்பட்டோருக்கு இலை உரம், காய் உரம், கிழங்கு உரம் கிடைக்காமையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்காலத்தில் தாம் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலை தோன்றியுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பகமுவ பிரதேச செலகம், நுவரெலியா பிரதேச செலகம்  மற்றும் கொத்மலை செயலக பிரதேசங்களில் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அதிகளவு விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். 

மலையக பகுதியில் உயர்மட்ட பொருட்களை விவசாய மூலம் பெரும் நோக்கில் பயிரிடபட்டபோதும் உரத்தட்டுப்பாட்டால் கதிகலங்கி போய் உள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் காலநிலைக்கு ஏற்ப விவசாயம் மத்திய மலை நாட்டில் மேற்கொண்டு வருகின்றனர்.அவர்களால் கறிமிளகாய், பச்சை மிளகாய், லீக்ஸ், கோவா, கரட், போஞ்சி, கத்தரி, கிழங்கு போன்ற காய்கறிகளை பயிரிட்ட போதும் அதற்கான பலனை அடைய முடியாத நிலை தோன்றியுள்ளது.

நாளாந்தம் 25க்கு மேற்பட்ட வாகனங்களில் தம்புள்ள பிரதான மரக்கறி விற்பனை சந்தைக்கு மரக்கறி கொண்டு சென்ற போதும் தற்போதைய நிலையில் 2 அல்லது 3 வாகனங்களில் மட்டுமே கொண்டு செல்கின்றனர். காரணம் உயர்ரக மரக்கறி வகைகள் பயிரிட்ட போதும் முறையான உரம் கிடைக்காததால் இந்நிலை தோன்றி உள்ளது என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். 

சம்பந்தப்பட்ட விவசாய திணைக்களம் முன்வந்து விவசாயிகளின் நலன் பேணி அரசாங்கத்திடம் இருந்து உரவகைகளை பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41